அடி வாங்கிய அமுதவாணன், மயங்கி கிடக்கும் அசீம்: பிக்பாஸ் வீட்டில் நடப்பது என்ன?

அடி வாங்கிய அமுதவாணன், மயங்கி கிடக்கும் அசீம்: பிக்பாஸ் வீட்டில் நடப்பது என்ன?

பிக்பாஸ் வீட்டில் அசீம் மற்றும் அமுதவாணன் இடையே அடிதடி நடப்பது போன்றும், அசீம் மயங்கி கிடப்பதும் போன்ற புரோமாக்களால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஐம்பது நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வருகிறார். 50 நாட்களைக் கடந்தும் நிகழ்ச்சி சுவாரசியம் இல்லாமல் செல்வதாக மக்கள் நினைப்பதாக கமல் கூறினார்.

இந்த நிலையில் இன்று வெளியான முதல் புரோமோ வீடியோவில் அசீம், அமுதவாணன் ஆகிய இருவருக்கும் அடிதடி ஏற்படுகிறது. அப்போது அமுதவாணனை அசீம் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே அசீம் அளவிற்கு அதிகமான முரட்டுத்தனத்துடன் விளையாடி வருகிறார் என்று நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று ஒளிபரப்பான இந்த புரோமோ இருந்தது.

ஆனால், அடுத்த வீடியோவில் அசீம் திடீரென மயங்கி விழுந்ததாகவும் அதனை அடுத்து அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை மருத்துவ அறைக்கு மற்ற போட்டியாளர்கள் அழைத்துச் செல்லும் காட்சிகளும் உள்ளன. இன்னொரு வீடியோவில்,அசீம்க்கு மைனா அறிவுரை சொல்வது போன்ற காட்சிகளும், ஒருவரைக் கன்னத்தில் அடிப்பது என்பது அத்துமீறிய செயல் என்று கூறும் காட்சிகளும் உள்ளன.

ஏற்கெனவே அசீமை கமல்ஹாசன் கண்டித்தும் அவர் திருந்தவில்லை என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். வரும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இது குறித்த பிரச்சினையை கமல்ஹாசன் விசாரிப்பார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in