‘ஜம்மு காஷ்மீரில் இருந்து ராணுவம் வெளியேறும்; சட்டம் ஒழுங்குக்கு காவல்துறை பொறுப்பேற்கும்’ அமித் ஷா உறுதி!

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர்

ஜம்மு காஷ்மீரில் இருந்து ராணுவத் துருப்புகளை திரும்பப் பெறுவது மற்றும் சட்டம் ஒழுங்குக்கான பொறுப்பை காவல்துறை வசம் கையளிப்பது ஆகியவற்றை பரிசீலித்து வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்புவது, மோடி அரசின் சாதனை, மத்திய அரசின் பரிசீலனை மற்றும் திட்டங்கள் ஆகியவற்றை புள்ளிவிவரங்களுடன் அமித் ஷா விளக்கியுள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கான தேர்தலும் அங்கே நடத்தப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. ஆனபோதும் தற்போதைக்கு அங்கே மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷீரில் பாஜகவுக்கு எதிரான வாக்காளர் மனநிலை இருப்பதாக சொல்லப்படுவதன் மத்தியில், அங்கத்திய நிலவரம் இதுதான் என ஜம்மு காஷ்மீர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமித்ஷா விளக்கி உள்ளார்.

அதன்படி யூனியன் பிரதேசத்தில் இருந்து ராணுவத் துருப்புக்களை திரும்பப் பெறவும், சட்டம் ஒழுங்கை ஜம்மு காஷ்மீர் போலீஸ் வசம் ஒப்படைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமித் ஷா கூறினார். இதன் பின்னணியில், "முன்பு, ஜம்மு காஷ்மீர் காவல்துறை நாங்கள் நம்பவில்லை, ஆனால் இன்று அவர்கள் சட்டம் ஒழுங்குக்கான நடவடிக்கைகளை தெளிவாக வழிநடத்துகிறார்கள்" என்றும் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் ’சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை ரத்து செய்வது குறித்தும் யோசிப்போம்’ என்று அவர் உறுதியளித்துள்ளார்.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டமானது, ஜம்மு காஷ்மீரில் பொது ஒழுங்கைப் பேணுவதற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. சந்தேக இடங்களில் தேடுதல், கைது செய்தல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்துதல் போன்ற அதிகாரங்களை வழங்குகிறது. இந்த சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு போலி என்கவுன்டர் கூட நடைபெறவில்லை என்றும், மாறாக முந்தைய போலி என்கவுன்டர்களில் ஈடுபட்டவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமித் ஷா கூறினார்.

’ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக 12 அமைப்புகளை மோடி அரசு தடை செய்துள்ளது. 36 நபர்களை பயங்கரவாதிகளாக அறிவித்து, 22க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது. பயங்கரவாத நிதியை தடுத்து நிறுத்தும் நோக்கில் 150 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது’ என்றும் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட தற்போது அமைதி வெகுவாக திரும்பியிருப்பதாக புள்ளி விவரங்களுடன் அமித் ஷா விளக்கி உள்ளார்.

ராணுவத்தினருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா
ராணுவத்தினருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா

2004 - 2014 இடையே 7217 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. இதுவே 2014 - 2023 காலத்தில் 2227 ஆக குறைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 70 சதவீத குறைப்பு ஆகும். 2004-2014 காலத்தின் பலியானோர் எண்ணிக்கை 2829 ஆகவும், அதுவே 2014-23 இடையே 915 ஆக குறைந்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இவற்றில் பொதுமக்களின் இறப்பு 1770 ஆக இருந்தது, 341 ஆக குறைந்துள்ளதாகவும், பாதுகாப்புப் படையினரின் இறப்பு எண்ணிக்கை 1060-ல் இருந்து 574 ஆகக் குறைந்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மக்களின் ஆதரவு இல்லாமல், இதுபோன்ற வியத்தகு மாற்றம் ஒருபோதும் அங்கே நடக்க வாய்ப்பில்லை என்றும் அம்மக்களை புகழ்ந்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in