
ராமேஸ்வரம் கோயிலில் அபிஷேகம் செய்தது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் ட்விட் பதிவிட்டுள்ளார். அமைச்சர் அமித் ஷா நேற்று ராமேஸ்வரத்தில் அண்ணாமலையின் நடைபயணத்தை தொடங்கிவைத்தார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார், இந்த விழாவை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அதன்பின்னர் இன்று காலையில் அமித் ஷா ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டில், “ ராமேஸ்வரம் கோவிலில் ஆர்த்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான பிரபு ஸ்ரீராம் பகவான், சிவனை வழிபட்ட இடம் இது. இந்த ஆலயம் சனாதன தர்மத்தின் தொன்மை மற்றும் மகத்துவத்தின் வெளிப்பாடாகும். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், நமது தேசத்தின் செழிப்பிற்காகவும் பிரார்த்தனை செய்தேன்” என்றார்