பாசிட்டிவ் பட்ஜெட்: பங்குச் சந்தைகள் உயர்வு கண்டன!

பங்குச்சந்தை உயர்வு
பங்குச்சந்தை உயர்வு

மக்களவை தாக்கல் செய்யப்பட்டு வரும் நிதிநிலை தொடர்பான நேர்மறை தாக்கம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு கண்டு வருகின்றன. இவை நடப்பு பட்ஜெட் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன.

2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்து வருவதன் மத்தியில், இந்திய பங்குச்சந்தைகள் உயர்வு கண்டு வருகின்றன. இவை நிதிநிலை அறிக்கை மீதான நேர்மறைத் தாக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கின்றன. நடப்பு பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும், எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்புகளே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், உலகளவிலான பொருளாதார சுணக்கம் மற்றும் கரோனா பாதிப்பின் மத்தியிலும் இந்திய பங்குச்சந்தைகள் பெரும் எழுச்சி கண்டிருந்தன. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதனை மேற்கோள் காட்டத் தவறவில்லை. பங்குச்சந்தையின் பாசிடிவ் போக்கும் இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் பங்குச்சந்தையை நம்பியிருக்கும் தினசரி வர்த்தகர்களுக்கு வாழ்வளித்தன.

நிதிநிலை அறிக்கை தாக்கலின் மத்தியில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 600 புள்ளிகளை உயர்ந்து, 60,150 என்பதை கடந்திருந்தது. மேலும் தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 132 புள்ளிகள் உயர்ந்து, 17.930 என்பதை கடந்திருந்தது.

அண்மை தினங்களாக உலகளாவிய பொருளாதார மந்தம், பெரியளவிலான பணியிழப்புகள் ஆகியவற்றோடு அதானி நிறுவம் மீதான பங்குச்சந்தை முறைகேட்டுப் புகார்களும் சேர்ந்து கொண்டதில், இந்திய பங்குச்சந்தைகள் பெரும் சரிவு கொண்டிருந்தன. அவற்றிலிருந்து மீண்டு தற்போதைய பட்ஜெட் அறிவிப்பால் இன்று உயர்வு கண்டு வருகின்றன. இவை பங்குச்சந்தை சார்ந்த பொருளாதாரத்துக்கான சாதக சூழலை காட்டுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in