’நடமாடும் இருதய பரிசோதனை மையம்’ -சென்னை மாநகராட்சி அறிமுகம்

 நடமாடும் இருதய பரிசோதனை மையம்
நடமாடும் இருதய பரிசோதனை மையம்’நடமாடும் இருதய பரிசோதனை மையம்’ - சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியது

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலன குளிர்சாதன வசதியுடன் கூடிய நடமாடும் இருதய பரிசோதனை மையம் பேருந்தினை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இருதய நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. முறையான பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்கும் விதமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள ஏதுவாக நடமாடும் இருதய பரிசோதனை மையத்தை சென்னை மாநகராட்சி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் தொடங்கியுள்ளது.

இப்பேருந்தில் முழுமையாக குளிர்சாதன வசதியுடன் 2 டிஜிட்டல் இ.சி.ஜி.(Digital ECG), 2 எக்கோ (ECHO) இயந்திரங்கள் மற்றும் தானியங்கி இரத்த மாதிரி கருவிகள் உள்ளன.

இந்தப் பேருந்து மூலம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட நகர்ப்புற சுகாதார மையங்களில் முகாம்கள் மூலமாக கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு இருதய நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in