2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபல நடிகை யார் தெரியுமா?

2022ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபல நடிகை யார் தெரியுமா?

2022 -ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் என்ற பெருமையை ஹாலிவுட் நடிகை ஆம்பர் ஹேர்ட்டு பெற்றுள்ளார்.

ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹேர்டின் அவதூறு வழக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் பேசப்படும் புள்ளிகளில் ஒன்றாக மாறியது. நடிகர்

ஜானி டெப் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்டுக்கு எதிராக தாக்கல் செய்த அவதூறு வழக்கில் இறுதியில் வெற்றி பெற்றார். டெப் வழக்கை வென்றாலும் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலம் என்று வந்தபோது அவர் ஆம்பரிடம் தோற்றார்.

ஹாலிவுட் செய்தி இணையதளம் ஒன்றின் தகவல்களின்படி, நடிகை ஆம்பர் ஹேர்டு அமெரிக்காவில் மாதத்திற்கு சராசரியாக 5.6 மில்லியன் தேடல்களுடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஜானி டெப் 5.5 மில்லியன் மாதத் தேடல்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். கிம் கர்தாஷியன், எலான் மஸ்க் ஆகியோர் அடுத்த இடத்தில் உள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in