அறுவை சிகிச்சைக்குத் தயார்; ஆல்யாவுக்கு என்ன ஆச்சு?

அறுவை சிகிச்சைக்குத் தயார்; ஆல்யாவுக்கு என்ன ஆச்சு?

நடிகை ஆல்யா தான் அறுவை சிகிச்சைக்குச் செல்வதாக பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை ஆல்யா. இரண்டாவது குழந்தைக்காக சீரியலில் இருந்து சிறிய பிரேக் எடுத்தவர் தற்போது சன் டிவியில் ’இனியா’ என்ற சீரியலில் கதாநாயகியாக கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், தனது காலில் அடிபட்டதாக புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார் ஆல்யா.

இப்போது தன் கணவர் சஞ்சீவுடன் அறுவை சிகிச்சை அறைக்குள் நுழைவதற்கு முன்பாக எடுத்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அத்துடன் "அறுவை சிகிச்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. ஆனாலும், சஞ்சீவின் மனைவி என்று சொல்லிக் கொள்ள பெருமையாக உள்ளது. ஏனென்றால், என்னைக் கவனித்துக் கொள்ள அவர் எப்போதும் தவறியதே கிடையாது. என்னுடைய நல்லது கெட்டது என எல்லாவற்றிலும் அவர் என்னைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். என்னை ஒரு சுமையாகவே கருதியதே கிடையாது. இப்படிதான் என்னுடைய வாழ்க்கை அவரால் அழகாகியது. ஒவ்வொரு நிமிடமும் என்னை அவர் நன்றாக அக்கறை எடுத்து கவனித்துக் கொள்வார். அவருக்கு எதாவது வலி ஏற்பட்டாலோ அல்லது எனக்கு ஏதேனும் வலி ஏற்பட்டாலோ அதை நான் உணரக்கூடாது என நினைப்பார். சஞ்சீவ் கடவுளிடம் இருந்து கிடைத்த பரிசு" என நெகிழ்ச்சியாகக் கூறி இருக்கிறார் ஆல்யா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in