இன்றும் மழை தொடரும்: 13 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

இன்றும் மழை தொடரும்: 13 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு

இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன்  இது குறித்து வவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே சுமார் 320 கி.மீ.தொலைவில் நிலை கொண்டிருந்தது. 

இது தென்மேற்கு திசையில் நகர்ந்து, திரிகோணமலைக்கு தெற்கே இலங்கை கடற்கரையைக் கடந்து, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளை நெருங்கியுள்ளது. இதனால் தென் தமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யக்கூடும். 

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் டிச. 27-ம் தேதி சில இடங்களிலும், வரும் 28, 29-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in