வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைத்தால் போதும்: குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

வங்கிக்கணக்குடன் ஆதாரை இணைத்தால் போதும்: குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

வங்கிக்கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதும் என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

திமுக தேர்தலில் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆன நிலையில் அந்தத் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறது. இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்த நிலையில் வங்கி கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கை தொடங்க கூட்டுறவுத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் வங்கிக்கணக்கு இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என்றும் ஏற்கெனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களிடம் பாஸ் புத்தகத்தின் நகல் அதில் குடும்பத் தலைவர் பெயர் மற்றும் குடும்ப அட்டை எண்ணை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது ஏற்கெனவே வங்கிக்கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என அறிவுறுத்த வேண்டும் என்று அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை பதிவாளர் இன்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதனால் ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் 1000 ரூபாய் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காகவே இந்த பணி நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in