பாம்பன் பாலத்தில் நாளை வரை அனைத்து ரயில் போக்குவரத்தும் ரத்து

பாம்பன் பாலத்தில் நாளை வரை அனைத்து ரயில் போக்குவரத்தும் ரத்து

பாம்பன் ரயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாளை (டிச.25) வரை அனைத்து ரயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் பொருத்தியுள்ள சென்சார் கருவியில் நேற்று அதிகாலை 2:31 மணியளவில் ரெட் அலர்ட் ஒலித்தது. இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரம்-மண்டபம் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்சார் கருவி செயல்பாடுகளைக் கண்காணிக்கும் சென்னை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் வரை ரயில்களை மண்டபத்தில் இருந்து இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

இதன்படி, டிச.23, 24-ல் சென்னை- ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்), டிச.24, 25-ல் ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் ரயில்கள்) ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது. டிச.24, 25-ல் திருச்சி - ராமேஸ்வரம் - திருச்சி, மதுரை - ராமேஸ்வரம் - மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

இதே காலத்தில் வாராந்திர விரைவு ரயில்கள் ராமேஸ்வரம் - மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் - ஹூப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சேவை ரயில் மட்டும் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 93605 48465 அலைபேசி எண், மண்டபம் ரயில் நிலையத்தில் உதவி மையம் 93605 44307 என்ற அலைபேசி எண் செயல்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in