தமிழ்நாட்டில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்... முக்கிய அறிவிப்பு

ரேஷன் கடைகள் நாளை இயங்கும்
ரேஷன் கடைகள் நாளை இயங்கும்தமிழ்நாட்டில் நாளை அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்... முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்ட வேலைகளுக்காக நாளை அனைத்து ரேஷன் கடைகள் வழக்கம் போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி மகளிருக்கான ரூபாய் 1000 உரிமைத் தொகை திட்டம் வரும் செப்.15-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் அமலுக்கு வர உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களும் வீடு வீடாகச் சென்று குடும்ப தலைவிகளுக்கு டோக்கன் மற்றும் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளின் அருகில் உள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதாவது, ஒவ்வொரு மகளிருக்கும் வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் குடும்பத் தலைவிகள் நேரடியாக முகாமிற்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை( ஜூலை 30) மகளிர் உரிமைத் தொகை திட்ட வேலைகள் தொடர்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநாளை ஈடுகட்டும் விதமாக ஆக.26-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in