’வயலில் வேலை செய்பவர்கள் அனைவரும் தலித்துகள்தான்’ - விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிகைத்

ராகேஷ் டிகைத்
ராகேஷ் டிகைத்

விவசாயிகளின் நிலங்கள் மற்றும் அவர்களின் பண்ணைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு வரும் ஆண்டுகளில் போராட்டங்களும், அவற்றில் மக்களின் பங்கேற்பும் முக்கியமானதாக இருக்கும் என்று விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிகைத் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் பகுஜன் சங்கர்ஷ் சமிதி நடத்திய விவசாயிகள் பேரணியில் பேசிய ராகேஷ் டிகைத், “தலித் என்பது சாதிக் குழு அல்ல, ஆனால் கிராமங்களில் வசிக்கும் மற்றும் வயல்களில் வேலை செய்பவர்கள் அனைவரும் தலித்துகள்தான். பண்ணைகளில் பணிபுரியும் மக்கள் அனைவரும் பகுஜன்” என்று கூறினார்.

நாட்டில் தற்போதைய மத்திய அரசாங்கம் அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என குற்றம் சுமத்திய அவர், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் கவிழ்க்கப்பட்டன என்றார்.

3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடந்த போராட்டம் குறித்து பேசிய அவர், "அப்போது அரசாங்கம் ஒரு சதிகாரர் போல செயல்பட்டது. மூவர்ணக் கொடியை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விவசாயிகள் மீது சுமத்தப்பட்டன. சீக்கிய சமூகத்தை காலிஸ்தானிகளாக சித்தரிக்கும் முயற்சிகளும் நடந்தது. இந்த சதிகள் அனைத்தும் நாக்பூரில் தீட்டப்பட்டன. ஆனால் உண்மை என்னவென்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in