‘எனது மனைவி தினமும் குடித்துவிட்டு வந்து மகள்களை அடிக்கிறார்’ - போலீஸில் கணவன் புகார்

தகராறு
தகராறு‘எனது மனைவி தினமும் குடித்துவிட்டு வந்து மகள்களை அடிக்கிறார்’ - போலீஸில் கணவன் புகார்

மகாராஷ்டிர மாநிலம் தானேவில், மது போதையில் தனது இரண்டு மகள்களை கடுமையாகத் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் 33 வயதுடைய பெண் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தானேவில் பன்னிரெண்டு மற்றும் ஆறு வயதுடைய இரு மகள்களுடன் தம்பதியர் வசித்து வருகின்றனர். அந்தப் பெண்ணுக்கு மது அருந்திவிட்டு வந்து அடிக்கடி மகள்களை அடிக்கும் பழக்கம் உள்ளது. கடந்த பிப்ரவரி 22-ம் தேதி அவர்களது அக்கம்பக்கத்தினர் பணியிடத்தில் இருந்த பெண்ணின் கணவருக்கு போன் செய்தார். அவரது மனைவி அவர்களைத் தாக்கியதால் மகள்களின் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரிடம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணின் கணவர் வீட்டிற்கு விரைந்து சென்று மகள்களுக்கு முதலுதவி செய்தார். அவரது மகள்கள் தங்கள் தாய் அவர்களை அடிக்கும் வீடியோவை அவரிடம் காட்டியுள்ளனர், அதன்பிறகு அவர் போலீசில் புகார் அளித்தார்.

கடந்த 8 ஆண்டுகளாக தனது மனைவி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாகவும், அவர் தனது மகள்களை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும் போலீஸாரிடம் கணவர் அளித்த புகாரில் தெரிவித்தார். நகை வடிவமைப்பாளராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மிரா பயந்தர்-வசாய் விரார் (எம்பிவிவி) போலீஸார் பிப்ரவரி 25 அன்று அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in