நாளை உ.பியில் நுழையும் யாத்திரை: ராகுல்காந்திக்கு வாழ்த்து தெரிவித்த அகிலேஷ், மாயாவதி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

நாளை உத்தரபிரதேச மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை நுழையவுள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு அகிலேஷ் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஆனால், ராகுல் காந்தியுடன் இணையும் திட்டம் ஏதும் உள்ளதா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை. பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள கடிதத்தில், “பாரத் ஜோடோ யாத்திரைக்கு என்னை அழைத்ததற்கு நன்றி. பாரத் ஜோடோ பிரச்சாரத்தின் வெற்றிக்கு வாழ்த்துகள். இந்தியா அன்பு, அகிம்சை, இரக்கம், ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒன்றுபட்டது. இந்த யாத்திரை நம் நாட்டின் ஒன்றுபட்ட கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் இலக்கை அடையும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வாரம், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸும் பாஜகவும் ஒன்றுதான் என்று விமர்சித்திருந்தார். ஆனால் அவர் யாத்திரையின் உணர்வை ஆதரிப்பதாகக் கூறினார். பதிலுக்கு ராகுல் காந்தி, "வெறுப்பும் அன்பும் முற்றிலும் நேர்மாறானவை. ஆனால் பலர் அன்பைப் பரப்ப விரும்புகிறார்கள். அகிலேஷ் ஜி மற்றும் மாயாவதி ஜி வெறுப்பை விரும்பவில்லை என்று எனக்குத் தெரியும்" என குறிப்பிட்டிருந்தார்.

மாயாவதியும், ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “பாரத் ஜோடோ யாத்திரைக்கு வாழ்த்துக்கள். ராகுல் காந்தியின் கடிதத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in