அலைக்கழித்த விமான நிறுவனம்... மாணவி வேதனை ட்வீட்: அதிரடி காட்டிய அமைச்சர்

மாணவி அனுஷ்கா
மாணவி அனுஷ்கா

விமான பயணத்தின்போது உடைமையை தவறவிட்டுச் சென்ற மாணவியை தனியார் விமான நிறுவனம் அலைக்கழித்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த மாணவிக்கு உடனடியாக உதவி செய்துள்ளார் மத்திய விமான போக்குவரத் துறை அமைச்சர் சிந்தியா.

சட்டக் கல்லூரி மாணவி அனுஷ்கா
சட்டக் கல்லூரி மாணவி அனுஷ்கா

சட்டக் கல்லூரி மாணவி அனுஷ்கா கடந்த 3-ம் தேதி இன்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது, காசோலை உள்ளிட்ட பொருட்களை அவர் தவறவிட்டுள்ளார். இதனை பெற விமான நிறுவனத்திடம் பெரும் போராட்டமே நடத்தியதாகவும், 4 விமான நிலையங்களுக்கு தன்னை அலையவைத்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் கூறியிருந்தார்.

மாணவி அனுஷ்காவின் ட்விட்டர் பதிவையடுத்து உடனடி நடவடிக்கை எடுக்க விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதி ஆதித்ய சிந்தியா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அமைச்சர் சிந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில், தங்களது உடைமை கல்லூரி விடுதி காப்பாளரிடம் பத்திரமான ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in