'இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் வாழும் உரிமைக்கு அச்சுறுத்தல்': மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை

'இந்தியாவில் காற்று மாசுபாட்டினால் வாழும் உரிமைக்கு அச்சுறுத்தல்': மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை

ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தானாகவே முன்வந்து நடத்திய விசாரணையில், இந்தியாவில் காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கைகளில் வெளியான தகவல்கள் உண்மையாக இருந்தால், காற்று மாசுபாடு இந்தியாவில் வாழும் உரிமைக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் உள்ள மக்களின் ஆயுட்காலம் 9.7 ஆண்டுகளும் , இந்தியாவில் உள்ள மக்களின் ஆயுட்காலம் 5 ஆண்டுகளும் குறைகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019-ல் தொடங்கப்பட்ட தேசிய தூய்மையான காற்று திட்டத்தின் நிலை உட்பட இந்த விவகாரம் குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் செயலாளர் நான்கு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த அறிக்கையில், உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்கள் அதிக மாசுபட்ட மாநிலங்களின் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. மாநில அதிகாரிகள் இந்த பிரச்சினையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மிகுந்த நேர்மையுடன் கையாள வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in