உடலில் மறைத்து ரூ.1.28 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயற்சி: ஏர் இந்தியா ஊழியர் கைது

கடத்தி வரப்பட்ட தங்கம்
கடத்தி வரப்பட்ட தங்கம்ரூ.1.28 மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற விமான ஊழியர் கைது!

தாய்லாந்து மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 2.04 கோடி மதிப்பிலான 3993 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையச் சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’ தாய்லாந்தில் இருந்து சென்னைக்குத் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்த பயணிகளை சோதனை செய்ததில், ரூ.31.01 லட்சம் மதிப்புள்ள 618 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கம் கடத்தி வருவதைக் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர் அவர்களை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல இலங்கையில் இருந்து உடைமைகளில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட ரூ.41.15 லட்சம் மதிப்புள்ள 820 கிராம் 24 கேரட் சுத்தத் தங்கத்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

சந்தேகத்திற்கு இடமளிக்கு வகையில் இருந்த ஏர் இந்தியா ஊழியரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர் தனது உடலில் மறைத்து வைத்துக் கொண்டு வந்த ரூ.1.28 கோடி மதிப்புள்ள 2555 கிராம் 24கேரட் சுத்தத் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in