ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்ததால் கடுப்பு... ஏர் இந்தியா ஊழியர்கள் 25 பேர் அதிரடியாக வேலைநீக்கம்!

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான ஊழியர்கள் ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்டோர் திடீரென விடுப்பு எடுத்தனர். இந்த நிலையில், 25 ஊழியர்களை அந்நிறுவனம் அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

இந்தியாவில் விமான சேவையை வழங்கி வரும் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் மத்திய கிழக்கு, தெற்காசியா, கொச்சி, திருவனந்தபுரம், திருச்சி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. ஏர் இந்திய நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கியதை தொடர்ந்து, அதன் பங்குடன் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் பணியாளர்களின் விவரங்களும் இணைக்கப்படுவதாக சமீபத்தில் வெளியாகின.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி, 300 ஊழியர்கள் திடீரென வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேசிய அளவில் 75-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், பயணிகளின் கட்டணத்தொகையும் திரும்ப வழங்கப்பட்டன. இந்த விவகாரம் குறித்து வான்வழி போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பணிக்கு வராத, சரிவர கடமையை சரியாக செய்யாத 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடியாக பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேபின் க்ரூ எனப்படும் பிரிவில் பணியாற்றி வரும் 25 ஊழியர்களை, அவர்களின் நடத்தை செயல் காரணமாக பணிநீக்கம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் அந்த ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஊழியர்களின் செயல் பொதுநலனைக் குலைப்பதோடு மட்டுமல்லாமல், நிறுவனத்தின் நற்பெயருக்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுப்பு எடுத்த மேலும் சில ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in