துபாயிலிருந்து கடத்தி வந்த தங்கம்: விமான நிறுவன ஊழியரை சிக்க வைத்த இலங்கை பயணி!

துபாயிலிருந்து கடத்தி வந்த தங்கம்: விமான நிறுவன ஊழியரை சிக்க வைத்த இலங்கை பயணி!

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை வைத்திருந்த ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை விமான சர்வதேச நிலையத்தில் அடிக்கடி கடத்தல் நிகழ்வதாக விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். அப்போது விமான நிலையத்தில் உள்ள வரி இல்லா பொருட்கள் விற்பனை கடையின் முன்பாக நின்றிருந்த ஏர் இந்தியா நிறுவன ஊழியர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்த பையைச் சோதனை செய்ததில் 43 லட்சம் மதிப்பிலான 988 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் வந்ததாகவும், இந்த பையை தன்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவரிடம் பையைக் கொடுத்தது யார் என்பது குறித்து சிசிடிவி கேமராக்கள் மூலம் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in