உக்ரைனிலிருந்து திரும்பிய பொறியியல் மாணவர்களுக்கு விடிவு காலம்!

உக்ரைனிலிருந்து திரும்பிய பொறியியல் மாணவர்களுக்கு விடிவு காலம்!

உக்ரைனில் இருந்து பாதியில் திரும்பிய பொறியியல் மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்துக் கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. தங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று கவலையில் இருந்த மாணவர்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.

நேட்டோ அமைப்பில் சேரக் கூடாது என்று உக்ரைனை வலியுறுத்தி வந்த ரஷ்யா, திடீரென அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால், உக்ரைனில் இருந்து கல்வி பயின்று வந்த வெளிநாட்டு மாணவ, மாணவர்கள் வெளியேறினர். இந்தியாவில் இருந்தும் மட்டும் 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் மருத்துவம் மற்றும் பொறியியில் படிப்புகளை படித்து வந்தனர். தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கல்வி பயின்று வந்தனர். பல இன்னல்களுக்கு மத்தியில் இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கை அலப்பரியது.

நாடு திரும்பிய மாணவர்கள், தங்கள் எதிர்பாலம் என்ன ஆகுமோ என்று கவலையில் இருந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். உக்ரைனில் இருந்து திரும்பி வந்த மாணவ, மாணவிகள் இந்தியாவிலேயே கல்வி பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். இது குறித்து திமுக எம்பிக்கள், நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பினர். அப்போது, பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்க அண்டை நாடுகளுடன் பேசி வருவதாக தெரிவித்தார். இது சற்று ஆறுதல் ஏற்படுத்தினாலும், மீண்டும் வெளிநாட்டிற்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் தயார் நிலையில் இல்லை. இந்தியாவிலேயே படிக்க வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்துக் கொள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள காலியிடங்களில் நடப்பாண்டே மாணவர்களை சேர்க்க உத்தரவிட்டுள்ளதால், பொறியியல் படிப்பை பாதியில் விட்டு இந்தியா திரும்பிய மாணவர்கள் பயன்பெறுவர். அதே நேரத்தில் மருத்துவ மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in