நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை: இன்றே உயர்ந்தது மல்லிகைப்பூ விலை

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை: இன்றே உயர்ந்தது மல்லிகைப்பூ விலை

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்று வரிசை கட்டும் பண்டிகைகளால்  மதுரையில் மல்லிகைப் பூவின்  விலை 2500 ரூபாய் வரையிலும்  உயர்ந்திருக்கிறது. 

மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே மலர் வணிக வளாகம் உள்ளது. மதுரை மட்டுமில்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் இங்கு  பல்வேறு வகை பூக்கள் விற்பனைக்கு தினமும் கொண்டு வரப்படுகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 50 டன் பூக்கள் இங்கு தினமும் விற்பனையாகிறது. 

பண்டிகை காலம்,  திருவிழா நேரங்களில் பூக்களின் விலையும் உயர்ந்து விற்பனையும் அதிகரிககும். தற்போது  பனிக்காலம்  என்பதால் பூக்கள் வரத்து சற்று குறைவாக உள்ளது.  மார்கழி பிறந்ததிலிருந்து திருமண முகூர்த்த நாட்கள் இல்லாததால், பூக்களின் விலை குறைந்திருந்தது.  இந்நிலையில் நாளை (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அதையொட்டி மல்லிகைப்பூ விலை இன்று  கிலோ ரூ. 2 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது. 

பிச்சிப்பூ, முல்லைப்பூ கிலோ ரூ.1,200க்கு விற்கப்படுகிறது. இதர பூக்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன், மல்லிகை பூ கிலோ ரூ.3,500 வரையிலும்  விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in