‘வடகிழக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்!’

அசாம் - மேகாலயா எல்லை ஒப்பந்தம் குறித்து அமித் ஷா பெருமிதம்
‘வடகிழக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்!’

அசாமுக்கும் மேகாலயாவுக்கும் இடையில் 50 ஆண்டுகளாக நீடித்துவரும் எல்லைப் பிரச்சினைக்குக் கிட்டத்தட்ட பாதி தீர்வு கிட்டியிருக்கிறது. இரு மாநிலங்களுக்கும் இடையிலான 884.9 கிலோமீட்டர் எல்லையில் 12 இடங்களில் சச்சரவு நீடிக்கிறது. அவற்றில் 6 இடங்கள் குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியிருக்கிறது.

1972-ல் அசாம் மாநிலத்திலிருந்து புதிய மாநிலமாக மேகாலயா உருவாக்கப்பட்டது. எனினும், அசாம் மறுவரையறை சட்டம் 1971-ல் இருக்கும் பல ஷரத்துகள் குறித்து மேகாலயா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தது. இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையில் பிரச்சினை 50 ஆண்டுகளுக்கு மேல் நீடித்துவந்தது.

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவுக்கும், மேகாலயா முதல்வர் கோன்ராட் சங்மாவுக்கும் இடையில், மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் முக்கியமான ஒப்பந்தம் இன்று (மார்ச் 29) டெல்லியில் கையெழுத்தானது.

இது தொடர்பாக உள் துறை அமைச்சகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “இது வடகிழக்கின் வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். இதன் மூலம், இரு மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினையில் 70 சதவீதம் தீர்க்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இரு மாநிலங்களும் மூன்று கமிட்டிகளை உருவாக்கின. இரு மாநில முதல்வர்களும் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in