அண்ணியுடன் கூடாநட்பு இல்லை என நிரூபிக்க அக்னி பரீட்சை: 11 லட்சத்தைப் பிடுங்கிய பஞ்சாயத்தார்

கங்காதருக்கு நடத்தப்பட்ட அக்னி பரீட்சை
கங்காதருக்கு நடத்தப்பட்ட அக்னி பரீட்சைஅண்ணியுடன் கூடாநட்பு இல்லை என நிரூபிக்க அக்னி பரீட்சை: 11 லட்சத்தைப் பிடுங்கிய பஞ்சாயத்தார்

அண்ணியுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு இளைஞருக்கு கிராமமே சேர்ந்து அக்னி பரீட்சை நடத்திய சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம், வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சராபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர். இவருடைய சகோதரர் நாகையா. இந்தநிலையில், பஞ்சாருப்பள்ளி கிராம பஞ்சாயத்தாரிடம் நாகையா, தனது தம்பி கங்காதர் மீது புகார் செய்தார். தன்னுடைய மனைவிக்கும், தனது தம்பி கங்காதருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ஊர் கூடியது. ஆனால், தனது அண்ணியுடன் தனக்கு எந்த உறவும் இல்லை என்று கங்காதர் பலமுறை கூறியும் பஞ்சாயத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. கங்காதர் குற்றமற்றவர் என நிரூபிக்க எரியும் நெருப்பில் இருந்து கம்பியை வெறும் கையால் எடுக்கும் அக்னி பரீட்சை நடத்த உத்தரவிடப்பட்டது. அப்படி செய்யாவிட்டால் 11 லட்ச ரூபாயை அபராதமாக கங்காதர் கட்ட வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டது.

இதையடுத்து நிலக்கரி குவிக்கப்பட்டு அதில் நெருப்பு வளர்க்கப்பட்டு அதில் கம்பி வைக்கப்பட்டது. அந்த கம்பியை எடுக்கும் போது கை நெருப்பால் வேகக்கூடாது. அப்படி வெந்தால் குற்றம் செய்தவர் என பஞ்சாயத்தார் சொன்னார்கள். இதையடுத்து அந்த கம்பியை நெருப்பில் இருந்து எடுத்து கங்காதர் வீசியுள்ளார். ஆனாலும், அதை ஒப்புக்கொள்ளாத பஞ்சாயத்தார், தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கங்காதரை கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பிப்.25-ம் தேதி நடந்துள்ளது.

இந்த நிலையில் கங்காதரின் மனைவி, போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில், பஞ்சாயத்தார் கூறியபடி நடத்தப்பட்ட அக்னி பரீட்சையில் எனது கணவருக்கு காயம் ஏற்படவில்லை. அவர் குற்றமற்றவர் என்று நிரூபித்து விட்டார். ஆனால், அவர் தவறு செய்ததாக ஒப்புக்கொள்ளக்கூறி பஞ்சாயத்தார் கட்டாயப்படுத்தியதுடன் பிரச்சினையைத் தீர்ப்பதாக 11 லட்ச ரூபாயையும் பறித்துக் கொண்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கங்காதர் அக்னி பரீட்சையில் ஈடுபடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in