ஆக்ரோஷமாக மோதும் தனுஷ்: ஹாலிவுட் படத்தின் சண்டைக்காட்சிகள் வைரல்!

ஆக்ரோஷமாக மோதும் தனுஷ்: ஹாலிவுட் படத்தின் சண்டைக்காட்சிகள் வைரல்!

நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள 'தி க்ரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்துள்ள ஒரு அதிரடி சண்டை காட்சி வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த உக்கிரமான சண்டைக் காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரியான் காஸ்லிங் மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோருடன் தனுஷ் நேருக்கு நேர் சண்டையிடும் வகையில் இந்த காட்சி அமைந்துள்ளது. தனுஷ் ஆக்ரோஷமாக மோதும் இந்த சண்டைக் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தனுஷ் இப்படத்தில் ஒரு கில்லிங்க் மிஷின், அவர் யாராலும் தடுக்க முடியாதவர் என்றும், தனுஷின் கதாபாத்திரம் மிகவும் ‘பவர்ஃபுல் கேரக்டராக’ இருக்கும் என்றும் படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் போன்ற மாஸ்ஹிட் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகமாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அது நெகட்டிவ் ரோலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களில் ரியான் காஸ்லிங், கிறிஸ் எவான்ஸ், ஜெசிகா ஹென்விக் மற்றும் அனா டி அர்மாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

2009-ம் ஆண்டில் வெளியான ‘தி க்ரே மேன்’ நாவலின் அடிப்படையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூலை 22-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in