அஜித் அகார்க்கர்
அஜித் அகார்க்கர்தலைமை தேர்வு குழு தலைவர்

உலக கோப்பையில் விளையாடப்போகும் வீரர்கள் யார், யார்?- பிசிசிஐ முக்கிய ஆலோசனை

மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து, 20-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட்
ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட்மேற்கு இந்திய சுற்றுப்பயணம்

இந்தநிலையில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரும், தற்போதைய இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அணித் தேர்வு தலைவராகவும் உள்ள அஜித் அகார்க்கர் மேற்கு இந்திய தீவுகளுக்கு புறப்பட்டு சென்றார். உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் வியூகங்கள், அணித்தேர்வு, திட்டங்கள் குறித்து கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோருடன் இணைந்து ஆலோசனை நடத்த அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதில், உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட உள்ள 20 வீரர்கள் யார், யார் என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அயர்லாந்துடனான டி20 தொடரில் கலந்துகொள்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. பும்ரா தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமி முகாமில் உள்ளார். அவரது உடற் தகுதி குறித்த சான்றிதழை அகாடமி வழங்கினால் மட்டுமே அவரால் இந்த தொடரில் கலந்துகொள்ள முடியும். அக்டோபர் 4-ம் தேதி உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்தியா தனது முதல் போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in