
2 வயாகரா மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு மது அருந்திய பின் தனது பெண் தோழியுடன் ஓட்டலில் தனிமையில் இருந்த தொழிலதிபர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நாக்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த 41 வயதான தொழிலதிபர் ஒரு ஓட்டலில் தனது பெண் தோழியுடன் நேற்று தங்கியிருந்தார். அங்கு அவர் வயாகரா மாத்திரைகள் இரண்டைச் சாப்பிட்டுள்ளதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் மருந்து அருந்தியுள்ளார். அதன் பின் பெண் தோழியுடன் நெருக்கமாக இருந்த போது திடீரென அவர் உடல் நலன் குன்றியுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது மயங்கி விழுந்தார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அவருடன் ஓட்டலில் இருந்த பெண் தோழியுடன் விசாரணை நடத்திய போது, தொழிலபதிபரான அவரது நண்பர், இரவில் வயாக்ரா பிராண்ட் மாத்திரையான சில்டெனாஃபில் மாத்திரைகள் 2 உட்கொண்டது தெரிய வந்தது. பிரேத பரிசோதனையில் இறந்தவரின் ரத்தம் உறைந்திருந்தது தெரிய வந்தது. ஆல்ஹகால் மற்றும் மருந்துகளின் கலவையால் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் இறந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில்," மருத்துவர்களின் ஆலோசனையின்றி விறைப்புத்தன்மை ஏற்படுத்தும் மாத்திரைகளை உட்கொள்ளக்கூடாது. இதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்பட வேண்டும் " என்றனர்.