ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலி: நீலகிரியில் பன்றி இறைச்சிக்குத்தடை

ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலி: நீலகிரியில் பன்றி இறைச்சிக்குத்தடை

உலக அளவில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாகப் பரவிவருகிறது. இதன் எதிரொலியாக நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்புப்பன்றிகளை உயிருடனோ, இறைச்சிப் பயன்பாட்டிற்காகவோ விற்பனை செய்யத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகில் முதுமலை வனப்பகுதி உள்ளது. தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகா மாநிலம், பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த வனப்பகுதி இதுவாகும்.

இங்கு முதுமலை புலிகள் காப்பகம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து காட்டுப்பன்றிகள் உயிர் இழந்துவந்தன. அதில் நடந்த உடற்கூறில் ஆப்ரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப்பன்றிகள் உயிர் இழந்தது தெரியவந்தது. இதனிடையே தமிழகம், கேரளம், கர்நாடகா மாநிலங்களின் மருத்துவ அதிகாரிகளுடன் இன்று கூட்டம் நடத்தினர்.

இதனிடையே கூடலூர் வனத்துறை அதிகாரிகள், “நீலகிரியில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலியால் நீலகிரி மாவட்டத்தில் வளர்ப்புப் பன்றிகள் இறைச்சியாகவோ, மொத்தமாகவோ விற்பனை செய்ய தடைவிதித்துள்ளதாக அறிவித்து உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in