பேக்கரி மாஸ்டருடன் தொடர்பு: தட்டிக்கேட்ட மனைவி மீது அழகு நிலைய பெண்கள் கொடூரத் தாக்குதல்

பெண்கள் கொடூரத் தாக்குதல்
பெண்கள் கொடூரத் தாக்குதல் பேக்கரி மாஸ்டருடன் தொடர்பு: தட்டிக்கேட்ட மனைவி மீது அழகு நிலைய பெண்கள் கொடூரத் தாக்குதல்

கும்மிடிப்பூண்டியில் உள்ள அழகு நிலையம் முன்பு 5 பெண்கள் ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. பேக்கரி மாஸ்டருடன் பெண்ணுக்கு ஏற்பட்ட பழக்கத்தால் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் நேபாளத்தைச் சேர்ந்த 5 பெண்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலான நிலையில் இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சண்டை போட்டுக் கொண்ட பெண்களில் ஒருவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்த மாஸ்டருடன் தொடர்பு இருந்திருக்கிறது. இந்த தகவல் அந்த மாஸ்டரின் மனைவிக்கு தெரியவரவே சம்பந்தப்பட்ட அழகு நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்ணிடம் தட்டிக் கேட்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த பெண்களுக்கும் பேக்கரி மாஸ்டரின் மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் ஒருவரை ஒருவர் முடியை பிடித்துக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். மேலும் இந்த வீடியோ இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த சண்டை என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. நடுரோட்டில் 5 பெண்கள் கடுமையாக தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in