சகோதரியுடன் வழக்கறிஞர் நந்தினி கன்னியாகுமரியில் திடீர் கைது!

சகோதரியுடன் வழக்கறிஞர் நந்தினி கன்னியாகுமரியில் திடீர் கைது!

அனுமதியின்றி கன்னியாகுமரியில் இருந்து மத்திய அரசைக் கண்டித்து நடைபயண பிரச்சார இயக்கத்தைத் தொடங்கிய வழக்கறிஞர் நந்தினி, அவரது சகோதரி நிரஞ்சனா ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

மத்திய அரசு, அம்பானி- அதானி போன்ற பெரும் வசதிப்படைத்தவர்களுக்கு 10.72 லட்சம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்துள்ளதாகவும், அந்தக் கடனை முழுமையாக வசூல் செய்து வேலையின்றி தவிக்கும் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி தன் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து பரப்புரை செய்துவந்தார்.

இந்நிலையில் இன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து, நந்தினியும், அவரது சகோதரி நிரஞ்சனாவும் பிரச்சார இயக்கத்தை தொடங்குவதாக அறிவித்தனர். அதன்படி இன்று கன்னியாகுமரிக்கு வந்த அவர்களிடம் காவல்துறையினர், பிரச்சார இயக்கத்திற்கு அனுமதி இல்லை எனவும், திரும்பிச் செல்லும்மாறும் வலியுறுத்தினர். ஆனால் இருவரும் அதற்கு மறுத்தனர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் கன்னியாகுமரி போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in