அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அமைக்கப்பட்டது இருசமூக ஆலோசனைக்குழு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டியை நடத்த அமைக்கப்பட்டது இருசமூக ஆலோசனைக்குழு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக இரு வேறு தரப்பினர் அடங்கிய தலா 8 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜன.15-ல் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடத்த உத்தரவிட வேண்டும் என அவனியாபுரம் முனியசாமி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக அனைத்து சமுதாய மக்களை இணைத்து சமாதான கூட்டம் நடத்த மதுரை கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்படி, இது தொடர்பாக ஆலோசிக்க ஒரு தனிக்குழு அமைக்கப்பட்டது.

மேலுார் கோட்டாட்சியர் பிர்தெளஸ் பாத்திமா தலைமையில் இரு தரப்பினர் வரவழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. ஏற்கெனவே திட்டமிட்டப்படி ஒருங்கிணைப்பு குழு மாவட்ட நிர்வாகம் அறிவித்த 9 பேருடன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் 10-வது உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவனியாபுரத்தில் உள்ள இரு வேறு தரப்பினர் தலா 8 பேர் கொண்ட ஆலோசனைக்குழு உருவாக்கப்பட்டது. இக்குழு மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தேவையான ஆலோசனை வழங்கும் என முடிவு செய்யப்பட்டு கூட்டம் நிறைவடைந்தது. முன்னதாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in