வினோத போதை கிராமம்; தள்ளாடும் இளம் பெண்கள்: அதிர்ச்சி வீடியோ

வினோத போதை கிராமம்; தள்ளாடும் இளம் பெண்கள்: அதிர்ச்சி வீடியோ

இளம்பெண் ஒருவர் போதையில் தள்ளாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சமீப காலமாக போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன. போதைக்கு வாலிபர்கள் அடிமையாகி வரும் சூழ்நிலையில் தற்போது, மாணவர்கள், மாணவிகள், இளம்பெண்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மதுபானங்களுக்கும் இவர்கள் அடிமையாகி வருவது வேதனையை அளிக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஒரு கிராமமே போதைக்கு அடிமையாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமம் பஞ்சாப்பில் உள்ளது. அமிஸ்டரில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மக்பூல்புரா கிராமம். இந்த கிராமம் இந்தியாவின் விதைவை கிராமம் என்று அழைக்கப்படுகிறது.

இங்கு இருக்கிற ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்கள் அகால மரணம் அடைந்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் போதைகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இளம்பெண் ஒருவர் போதையில் தள்ளாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனக்குத்தானே அந்த இளம்பெண் போதை ஊசியை போட்டு கொண்டதாக வீடியோ எடுத்தவர் கூறியுள்ளார். போதைக்கு இளம்பெண்கள் அடிமையாகி வருவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in