கழுத்தை நெரித்த கடன்; பிரிந்து போன மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு

கழுத்தை நெரித்த கடன்; பிரிந்து போன மனைவி: கணவர் எடுத்த விபரீத முடிவு

தென்காசி மாவட்டத்தில் ஏற்கெனவே கடன் பிரச்சினையால் தவித்து வந்த வாலிபர் மனைவியும் பிரிந்து போன துயரத்தில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகில் உள்ள காமராஜ் நகரைச் சேர்ந்தவர் முருகன்(35). தொழில் நஷ்டம் காரணமாக இவர் அண்மைக்காலமாக கடன் தொல்லையால் தவித்து வந்தார். இதனிடையே இவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரது மனைவியும் பிரிந்து தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். முருகன் தன் மனைவியை நேரில் போய் சமாதானம் செய்துப் பார்த்தார். ஆனால் அவர் சேர்ந்து வாழ வரவில்லை.

இதனால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த முருகன் அண்மைக்காலமாகவே யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்துத் தகவல் தெரியவந்ததும் பாவூர் சத்திரம் போலீஸார், உடலை பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மனைவி பிரிந்த வருத்தத்தில் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in