பள்ளி கல்வித்துறை அமைச்சர் அளித்த உறுதி: ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்தது டிட்டோ ஜாக்

டிட்டோ ஜாக் ஆலோசனைக் கூட்டம்
டிட்டோ ஜாக் ஆலோசனைக் கூட்டம்

தங்களின் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோ ஜாக்) அமைப்பின் சார்பில் நாளை மறுதினம் (4-ம் தேதி) நடைபெற இருந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில கட்டிடத்தில் டிட்டோ ஜாக் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் கூட்டமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கவனம் ஈர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

'04.8.2022 தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரில் சிஇஓ அலுவலகம் முன்பு முதல்வரின் கவனம் ஈர்க்கும் வகையில் கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் அவரை சந்தித்து 18 அம்ச கோரிக்கையினை வலியுறுத்தி பேசப்பட்டது.

அதில் அரசாணை 101 மற்றும் 108 ஆகியவற்றை இரண்டொரு நாளில் ரத்து செய்வதாகவும் மற்றும் நிதி சார்ந்த கோரிக்கைகளை முதல்வர் கவனத்தில் கொண்டு சென்று நல்ல முடிவை அறிவிப்பதாகவும் உறுதி அளித்ததின் பேரில் மீண்டும் இன்று மாலை 3 அளவில் டிட்டோஜாக் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி 04.08.2022 நடைபெற இருந்த மாநிலம் தழுவி கவனம் ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று ஒருமனதாக முடிவு எடுக்க பட்டது' என்று கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in