பண்டிகை கால கூட்டத்தை தவிர்க்க ரயில்வே அதிரடி நடவடிக்கை!

பண்டிகை கால கூட்டத்தை தவிர்க்க ரயில்வே அதிரடி நடவடிக்கை!

பண்டிகை காலத்தின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் சமாளிக்க இன்று முதல் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

பண்டிகை காலங்களில் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். குறிப்பாகச் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த சூழலில் பேருந்து, ரயிலில் முன்பதிவு விரைவாக நடந்துவிடுவதால் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதால் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் பண்டிகை கால கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் பல்வேறு ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி , ஒரு இரண்டாம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதா ரயிலில் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in