தசாரா பண்டிகைக்காக குலசேகரப்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள்: அக்.1 முதல் 4 வரை இயக்க ஏற்பாடு

தசாரா பண்டிகைக்காக குலசேகரப்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள்: அக்.1 முதல் 4 வரை இயக்க ஏற்பாடு

தசாரா பண்டிகையை முன்னிட்டு அக்.1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை குலசேகரப்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அக். 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேலகரப்பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேலகரப்பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பண்டிகை முடிந்து திரும்பிட வசதியாக அக்.6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து வசதியைப் பயணிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in