சரிவில் இருந்து மீண்டு வந்த அதானி: ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் 2-வது இடம்!

கௌதம் அதானி
கௌதம் அதானிசரிவில் இருந்து மீண்டு வந்த அதானி: ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் 2-வது இடம்!

கடும் சரிவில் இருந்து மீண்டெழுந்து ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் பட்டியலில் கௌதம் அதானி மீண்டும் இடம் பிடித்துள்ளார்.

சர்வதேச பங்கு வர்த்தகத்தில் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி மற்றும் அவரது நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக ‘ஹிண்டன்பர்க்’ அறிக்கை வெளியிட்டது. இதனால் அதானி குழுமத்தின் பங்கு வர்த்தகம் ஆட்டம் கண்டது. இதனால் உலக தொழிலதிபர்களின் முன்னணி பட்டியலில் இருந்து கௌதம் அதானி பின்னுக்குத் தள்ளப்பட்டார். அதனால் அவரது சொத்து மதிப்பும் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், தற்போது கௌதம் அதானியின் பங்கு வர்த்தகம் மற்றும் தொழில் வளர்ச்சி மேம்படத் தொடங்கியுள்ளது. இதனால் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக கௌதம் அதானி மீண்டும் முன்னேறியுள்ளார். இதில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

‘புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்ட பில்லியனர்கள் பட்டியலில், 23-வது இடத்தில் இருந்த அதானி 18-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் உயர்ந்து வருவதால், அவரது சொத்து மதிப்பு 64.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

நேற்றைய நிகர மதிப்பு 4.38 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனால் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரராக கௌதம் அதானி முன்னேறியுள்ளார். சீனாவைச் சேர்ந்த ஜாங் ஷான்ஷன் 62.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 19-வது இடத்தில் உள்ளார். டாப் 10 உலக பணக்காரர்களில் ஒன்பது பெரும் பணக்காரர்கள் அமெரிக்கர்கள் என்று ‘புளூம்பெர்க்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in