அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: விசாரணைக்கு நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்: நிபுணர் குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தக் குழுவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎம் சப்ரே தலைமை தாங்குவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல அதானி குழுமத்தின் பங்குகளின் விலையில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதைக் கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி ஏஎம் சப்ரே 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் ஓ.பி.பட், ஜே.பி.தேவ்தர், கே.வி.காமத், நந்தன் நிலகேனி மற்றும் வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இது தொடர்பாக இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தகவல்களும் இந்த குழுவிற்கு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கும், செபிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பிற்காக முழு வெளிப்படைத்தன்மை தேவை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் முதலீட்டாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு அதானி குழுமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் உண்மை வெல்லும் என்றும் அதன் ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் இதுவரை 120 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in