‘ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் படிப்புக்கு நாங்கள் பொறுப்பு’

கவுதம் அதானி அறிவிப்பு
ஒடிசா துயரம் - கவுதம் அதானி
ஒடிசா துயரம் - கவுதம் அதானி

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவுக்கு அதானி குழுமம் பொறுப்பேற்கும் என அதன் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், நேற்று முன்தினம் 3 ரயில்கள் விபத்துக்கு ஆளானதில், 280க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேலானோர் காயமடைந்துள்ளனர்.

உலகை உலுக்கிய இந்த கோர விபத்தில் உயிழந்தோர் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில், மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம், படுகாயமடைந்தோருக்கு ரூ2 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ50 ஆயிரம் என நிவாரண உதவிகளை உடனடியாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் தத்தம் மாநிலத்தை சேர்ந்தோருக்கு நிவாரண உதவிகளை அறிவித்தனர். காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, தனது விதிமுறைகளை தளர்த்தி, விரைந்து இழப்பீட்டுத் தொகையினை வழங்குவதாக அறிவித்துள்ளது. இவற்றின் தொடர்ச்சியாய், அதானி குழுமம் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ரயில் விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளின் கல்விச் செலவுக்கு பொறுப்பேற்பதாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி இன்று அறிவித்துள்ளார். ’நிராதரவாக நிற்கும் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்துக்கு அதானி குழுமம் துணை நிற்கும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in