ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட்டில் நடிகையின் ஆபாசப் புகைப்படம்: கர்நாடகாவில் சர்ச்சை

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட்டில் நடிகையின்  ஆபாசப் புகைப்படம்: கர்நாடகாவில் சர்ச்சை

கர்நாடக மாநிலத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட்டில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் ஆபாசப் புகைப்படம் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநில அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் நடத்த உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க லட்சகணக்கானோர் விண்ணப்பித்து தேர்வை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஒரு மாணவியின் ஹால் டிக்கெட்டில் கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் ஆபாசப் புகைப்படம் இடம் பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து தேர்வு ஆணையம் குறிப்பிட்ட மாணவியிடம் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தியது. அப்போது மாணவி தனது கணவரின் நண்பர் ஒருவர் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்ததாகவும் அவர் தவறான புகைப்படத்தை பதிவு செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் ஆன்லைன் மூலமாக எந்த புகைப்படம் பதிவு செய்தாலும் அதை ஆய்வு செய்யாமல் அவ்வாறே வெளியிடும் மோசமான நிலையில் கல்வித்துறையின் உட்கட்டமைப்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஹால் டிக்கெட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in