எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த நீலிமாராணி!

எதிர்மறை விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த நீலிமாராணி!

சமூகவலைதளங்களில் தான் எதிர்கொள்ளும் விமர்சனங்களுக்கு நடிகை நீலிமாராணி பதிலடி கொடுத்துள்ளார்.

சோஷியல் மீடியா களம் வளர வளர அதனைப் பயன்படுத்துபவர்களும் நிறைய எதிர்மறை விஷயங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. குறிப்பாக சினிமாத்துறை பிரபலங்கள் இதில் இதனை அதிகமாக எதிர்கொள்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகையும், சீரியல் தயாரிப்பு நிறுவனருமான நீலிமா ராணி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சமூகவலைதளத்தில் தனக்கு எதிர்மறை விமர்சனங்களைக் கொடுப்பவர்கள் ஐடி-யை ப்ளாக் செய்து தெரிவித்திருப்பதாவது: என்னைச் சுற்றி நிறைய எதிர்மறை விமர்சனங்களும் கருத்துகளும் வந்து கொண்டே இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் அப்படியே நகர்ந்து விட வேண்டும் என்பதையும் அறிவேன். அதைதான் இப்போது நான் செய்து கொண்டிருக்கிறேன். இதுபோன்று சமூகவலைதளங்களில் எதிர்மறைக் கருத்துகளைக் கொடுப்பவர்களை ப்ளாக் செய்துவிட்டு அவர்களின் ஆத்மா அமைதியடைய வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

இது எப்போதுமே முடியாத கதை. இதை ப்ளாக் செய்துவிட்டுதான் போக வேண்டும். நானும் இது போன்று தினந்தோறும் நிறைய எதிர்கொள்கிறேன் என நீலிமாவின் செயலுக்கு ஆதரவாக பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in