'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய காவ்யா!

'பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய காவ்யா!

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா விலகுவதாக அறிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இதில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே சித்ராவின் திடீர் மரணம் காரணமாக அந்தக் கதாபாத்திரத்தில் காவ்யா நடித்து வந்தார். இதன் மூலம் அவருக்கு பரவலான அறிமுகம் கிடைத்தது. காவ்யா இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்து சில மாதங்களே ஆன நிலையில் தற்போது இந்த சீரியலில் இருந்து விலக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

‘14.09.2022- பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் முல்லையின் கடைசி நாள் இது. இந்த அழகான பயணத்திற்கு அனைவருக்கும் நன்றி’ என புகைப்படத்தைப் பகிர்ந்து அதில் தெரிவித்துள்ளார்.

படங்களில் நடிப்பதற்கு காவ்யா ஆர்வம் காட்டி வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. சீரியலில் இருந்து இவ்வளவு சீக்கிரம் விலக வேண்டாம் என சேனல் தரப்பு தெரிவித்து இருந்தும் காவ்யா இந்த முடிவு எடுத்திருப்பதாக சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து, இனி முல்லை கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தக் கதாபாத்திரத்திற்காக ஏற்கெனவே மூன்று பேர் பரிசீலனையில் இருந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ‘சிப்பிக்குள் முத்து’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை லாவண்யா, காவ்யா கதாபாத்திரத்திற்காக தேர்வாகியுள்ளார்.

தற்போது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’ சீரியல்களின் சங்கமம் தொடர்பான எபிசோட் போய்க் கொண்டிருப்பதால் இது முடிந்ததும் லாவண்யா அந்தக் கதாபாத்திரத்தில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in