பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் நடிகை ஆல்யா மானசா: மீண்டும் சின்னத்திரைக்கு தயாராகிறார்

பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் நடிகை ஆல்யா மானசா: மீண்டும்  சின்னத்திரைக்கு தயாராகிறார்

நடிகை ஆல்யா மனசா மீண்டும் சின்னத்திரைக்குள் வருவதற்கு தயாராகி வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஆல்யா மனசா. அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவுக்கும், அவருக்கும் காதல் திருமணம் நடந்து, ஐலா சையத் என்ற பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில், குழந்தை பிறப்புக்குப் பிறகு சிறிது காலம் சீரியல்களில் இருந்து பிரேக் எடுத்து கொண்டவர் ‘ராஜா ராணி- சீசன்2’ மூலமாக மீண்டும் நடிக்க வந்தார். சீரியலிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மீண்டும் கர்ப்பமாக, சீரியலில் இருந்து விலகினார் ஆல்யா. இரண்டாவது குழந்தைக்காக மீண்டும் சீரியலுக்கு பிரேக் விட்டிருந்தவர் தற்போது தன்னுடைய ரீ-எண்ட்ரிக்காக முழு வீச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

’ராஜா ராணி2’ சீரியலிலேயே மீண்டும் வர மாட்டேன் ஆனால், புது சீரியலில் விரைவில் நடிக்க வருவேன் என ஆல்யா முன்பு தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்து இருந்தார்.

அதனால், பிரசவத்தால் தன்னுடைய கூடிய உடல் எடையை குறைப்பதற்காகப் பாக்ஸிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளார் ஆல்யா மானசா. பயிற்சியாளருடன் பாக்ஸிங் பயிற்சி எடுக்கும் வீடியோவை சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சஞ்சீவ், ‘ஆல்யா தன்னுடைய கம்பேக்கிற்காக தீவிரமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறார்’ என மகிழ்ச்சியுடன் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அடுத்து என்ன புது சீரியலில் ஆல்யா மானசா நடிக்க இருக்கிறார் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in