‘ நடிகர் விஜய் கொடுத்த முத்தம்’ -பாடலாசிரியர் விவேக் உருக்கம்!

பாடலாசிரியர் விவேக் - நடிகர் விஜய் கொடுத்த முத்தம்
பாடலாசிரியர் விவேக் - நடிகர் விஜய் கொடுத்த முத்தம்'' நடிகர் விஜய் கொடுத்த முத்தம்’’ - பாடலாசிரியர் விவேக் உருக்கம்!

பாடலாசிரியர் விவேக், தனக்கு நடிகர் விஜய் முத்தம் பதிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருப்பது, விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பாடலாசிரியர் விவேக் மெர்சல், பிகில், சர்கார், வாரிசு என நடிகர் விஜயின் படங்களுக்கு தொடர்ச்சியாக பாடல் எழுதி வருகிறார். குறிப்பாக ’ஆளப்போறான் தமிழன்’, ’சிங்கப்பெண்ணே’ போன்ற பாடல்கள் மிகப்பெரும் அளவில் ஹிட் அடித்தன.

பொங்கலுக்கு ரிலீஸான வாரிசு திரைப்படத்தில் பாடல்கள் மட்டுமின்றி, வசனங்களையும் விவேக் எழுதியிருந்தார். வாரிசு படத்தின் வசனங்கள் விஜய் ரசிகர் மத்தில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் மகிழ்வடைந்த விஜய் அதனை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார்.

அப்படி ஒரு தருணமாக நடிகர் விஜய் தனக்கு முத்தம் கொடுக்கும் போட்டோவை ட்விட்டரில் வெளியிட்ட பாடலாசிரியர் விஜய், ''சில உறவுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. இந்த நம்ப முடியாத பயணத்தில் நீங்கள் என்னிடம் மூத்த சகோதரரைப் போல அன்பும் ஆதரவும் அளித்திருந்தீர்கள். என் கலைப் பயணத்தில் இந்த அழகான தருணத்தை எதனாலும் வெல்ல முடியாது. லவ் யூ தளபதி'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in