‘கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே!’ - விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் போஸ்டர்

‘கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே!’ - விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் போஸ்டர்
விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர்

நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மதுரை நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 48-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பலரும் விதவிதமான வாழ்த்து வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டி அமர்க்களப்படுத்துகின்றனர்.

இந்நிலையில், மதுரையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை வடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே!’ எனும் வாசகம் இடம்பெற்றுள்ளது. இது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. விஜய் நடிக்கும் 66-வது படத்திற்கு ‘வாரிசு’ எனப் பெயர் சூட்டப்பட்டிருப்பது பல்வேறு ஊகங்களுக்கு இடமளித்துள்ள நிலையில், இந்த ஒற்றைத் தலைமை போஸ்டரையும் இணைத்து இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அதிமுகவில் ஓபிஎஸா, இபிஎஸா என்ற ஒற்றை தலைமை கோஷம் வலுத்து வரும் சூழலில், 'ஒற்றைத் தலைமை' என்ற வாசகத்தை பயன்படுத்தி சந்தடி சாக்கில் விஜய் ரசிகர்கள் அடித்த இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே, மதுரை விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பல்வேறு சூழல்களில் சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அதிமுகவினரை வம்புக்கு இழுத்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in