நடிகர் சூர்யா பட கதாநாயகி 'குக் வித் கோமாளி -3 ’ முதல் பைனலிஸ்ட்!

நடிகர் சூர்யா பட கதாநாயகி 'குக் வித் கோமாளி -3 ’ முதல் பைனலிஸ்ட்!

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ‘குக் வித் கோமாளி’யும் ஒன்று. முதல் இரண்டு சீசன்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசனும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த வாரம் டிக்கெட் டு பினாலே நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முத்துக்குமார், ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி என ஐந்து பேர் பங்கேற்றனர். இதில் நடுவர்களால் முதல் பைனலிஸ்ட்டாக ஸ்ருதிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நடிகர் சூர்யா நடித்த’ ஸ்ரீ’ படத்தின் கதாநாயகி ஆவார்.
அவர் நேரடியாக ‘குக் வித் கோமாளி சீசன்- 3’ பைனலுக்கு தற்போது சென்றுள்ளார். அவருக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in