முதல்வர் ஸ்டாலினின் புன்னகை - காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறேன்: நடிகர் சத்யராஜ் பெருமிதம்

முதல்வர் ஸ்டாலினின் புன்னகை - காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறேன்: நடிகர் சத்யராஜ் பெருமிதம்

நேற்று சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து வாசிக்கும் போது, ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதற்கு நேர் மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மனிதனுக்கு அழகு சிரிப்பு, அந்த சிரிப்பை விட அழகானது புன்னகை. சமீபத்தில் ஒரு புன்னகை என்னை மிகவும் கவர்ந்தது. அது சட்டசபையில் நமது மானமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புன்னகை.

அந்த புன்னகையில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் சுய மரியாதை சுடர் விட்டது. பேரறிஞர் அண்ணாவின் எதையும் தாங்கும் இதயம் பளிச்சிட்டது, கலைஞரின் நெஞ்சுக்கு நீதி கிளர்ந்து எழுந்தது. தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் வாழும் சாதாரண குடிமகனாக அந்த புன்னகையில் பெருமையும் மகிழ்ச்சியை அடைகிறேன். காலரை தூக்கிவிட்டுக் கொள்கிறேன். Hats off முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in