நடிகர் ஆர்.கே மனைவியைக் கட்டிப்போட்டு 250 பவுன் நகை, 3 லட்சம் கொள்ளை: வடமாநில கும்பல் அட்டகாசம்

நடிகர் ஆர்.கே மனைவியைக்  கட்டிப்போட்டு 250 பவுன் நகை, 3 லட்சம் கொள்ளை: வடமாநில கும்பல் அட்டகாசம்

நடிகர் ஆர்.கே.மனைவியைக் கட்டிப்போட்டு கத்திமுனையில் 250 பவுன் நகை, 3 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வடமாநிலக்கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

'எல்லாம் அவன் செயல்', 'ஜில்லா', 'அவன் இவன்', 'அழகர்மலை' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் ராதாகிருஷ்ணா என்ற ஆர். கே(63). இவர் சென்னை நந்தம்பாக்கம் டிபன்ஸ்காலனி 12-வது குறுக்குத் தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ராஜி(53) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

நடிகர் ஆர்.கே.
நடிகர் ஆர்.கே.

இந்நிலையில் நடிகர் ராதாகிருஷ்ணா வேலை நிமிர்த்தமாக நேற்று வெளியே சென்று விட்டதால் வீட்டில் மனைவி ராஜி மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து ராஜியிடம் கத்தியைக் காட்டி அவரை கை,கால்களைக் கட்டிப்போட்டு வாயில் பிளாஸ்டரால் ஒட்டியுள்ளனர். பின்னர் பீரோவில் இருந்த சுமார் 250 சவரன் நகை மற்றும் 3 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து டூவீலரில் தப்பிச்சென்றது. சிறிது நேரம் கழித்து அருகிலிருந்த பொதுமக்கள் ராஜியை மீட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் நந்தம்பாக்கம் போலீஸார் மற்றும் கைரேகை நிபுணர்கள்,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்துடன் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது நடிகர் ராதாகிருஷ்ணா வீட்டில் பல ஆண்டுகள் காவலாளியாக வேலை பார்த்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த ரமேஷ் (33), இரு வடமாநில நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து ராதாகிருஷ்ணா அளித்த புகாரின் பேரில் நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். மேலும் கொள்ளையர்கள் வெளிமாநிலத்திற்கு தப்பி செல்லாதவாறு கொள்ளையர்களின் புகைப்படங்களை விமான நிலையம், ரயில் நிலையங்களில் உள்ள போலீஸாருக்கு அனுப்பி வைத்து உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவ நந்தம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in