பள்ளிக்கூடத்தில் படையல்போட்ட தலைமையாசிரியர்: வீடியோவால் சிக்கிய ஆசிரியர்கள்

பள்ளிக்கூடத்தில் படையல்போட்ட தலைமையாசிரியர்: வீடியோவால் சிக்கிய ஆசிரியர்கள்

அரசுப் பள்ளிக்கூடத்தில் சமையல் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துள்ளார் தலைமை ஆசிரியர். வீடியோ வெளியான நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே சவுரிபாளையத்தில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் வெங்கடேசன். இவர், தை அமாவாசையன்று ஆசிரியர்கள், உறவினர்களை அழைத்து பள்ளிக் கூடத்தில் சமைத்து படையலிட்டுள்ளார். பின்னர், உணவை பவானி கூடுதுறைக்கு கொண்டு சென்று பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ வெளியானது. இதையடுத்து, மாவட்ட தொடக்க‌க் கல்வி அலுவலர் மாதேஷ் பள்ளிக்கூடத்துக்கு சென்று விசாரணை செய்தார். அப்போது, பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியர் படையலிட்டது தெரியவந்த‌து. இதையடுத்து, ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in