நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிட் வீசிய பெண்... அலறிய தாய், மகள்கள்: நிலப் பிரச்சினையால் நிகழ்ந்த கொடூரம்

நள்ளிரவில் வீடு புகுந்து ஆசிட் வீசிய பெண்... அலறிய தாய், மகள்கள்: நிலப் பிரச்சினையால் நிகழ்ந்த கொடூரம்

கேரளத்தில் நிலம் தொடர்பான தகராறில் பெண் ஒருவர் வீடுபுகுந்து மூன்றுபேர் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கேரள மாநிலம், பன்னியோடு அருகில் உள்ள கட்டகடா பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா(50). இவரது பக்கத்துவீட்டைச் சேர்ந்தவர் மேரி. இவருக்கு பிந்து, அஜிஷா என இருமகள்கள் உள்ளனர். சந்திரிகா குடும்பத்திற்கும், பிந்து குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை நீண்டகாலமாக இருந்துவந்தது.

இது சம்பந்தமாக வருவாய் ஆய்வாளர் தலைமையில் நிலம் அளந்து சமரசமும் செய்யப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட இடத்தில் நில அளவைக்குப் பின்பு மேரி குடும்பத்தினர் காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இதற்கும் சந்திரிகா எதிர்ப்பு தெரிவித்தார். அவர்களோடு தகராறிலும் ஈடுபட்டார். இதனால் காம்பவுண்ட் கட்டும் திட்டம் கிடப்பில் கிடக்கிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென மேரி வீட்டுக்குள் நுழைந்த சந்திரிகா, ஆசிட்டை எடுத்து மேரி, அவரது மகள்கள் பிந்து, அஜிஷா ஆகியோர் மீது ஊற்றினார். இதில் அவர்கள் அலறி துடித்தனர். முகத்தில் பலத்த காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். ஆசிட் வீசிய சந்திரிகாவை போலீஸார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in