இறந்தவரின் பேரில் போலி கையெழுத்து; கரோனா காலத்தில் 1.63 கோடி கையாடல்: சிக்கிய கணக்காளர்!

இறந்தவரின் பேரில் போலி கையெழுத்து; கரோனா காலத்தில் 1.63 கோடி கையாடல்: சிக்கிய கணக்காளர்!

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் 1.63 கோடி ரூபாய் கையாடல் செய்த கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி அலுவலர் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் முதன்மை நிதி அலுவலர் கணேஷ் கார்த்திகேயன் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மேலாளராக சைமன் சாக்கோ என்பவர் பணியாற்றி வந்தார். வரவு செலவு மற்றும் பண பரிவர்த்தனைகளை கணக்காளர் ஹரிஹரன் கவனித்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு மேலாளர் சைமன் சாக்கோ இறந்த பின்பு வரவு செலவு தொடர்பான கணக்குகளை தணிக்கை செய்தபோது 1.64 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கணக்காளர் ஹரிஹரன்
கணக்காளர் ஹரிஹரன்

மேலும், கரோனா காலகட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் எந்தவிதமான பணப்பரிமாற்றமும் செய்யாத நிலையில் 1.64 கோடி ரூபாய் வங்கிக்கணக்கில் இருந்து சென்றது தொடர்பாக விசாரணை நடத்தியபோது இறந்துபோன மேலாளர் சைமன்சாக்கோ கையெழுத்தை காசோலைகளில் போலியாக போட்டு கணக்காளர் ஹரிஹரன் தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக வங்கிக்கணக்கில் இருந்து 1.64 கோடி ரூபாயை கையாடல் செய்து விட்டார். எனவே தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான பணத்தை கையாடல் செய்த கணக்காளர் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

அப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஹரிஹரன்(52) என்பவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கைதான ஹரிஹரனை பணியிடை நீக்கம் செய்து தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in